கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தில் ‘ராகுல்காந்தியை காணவில்லை என்ற போஸ்டர் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று குஜராத் மாநில காந்திநகரில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியை காணவில்லை என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காந்திநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற அத்வானி, அதன்பின்னர் தனது சொந்த தொகுதிக்கு செல்லவில்லை என்றும், அதனால் அந்த பகுதியில் உள்ள காங்கிரஸார் சிலர் சர்ச்சைக்குரிய போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த போஸ்டரில் ‘கடந்த சில ஆண்டுகளாக அத்வானியை காணவில்லை தொகுதி மக்களாகிய நாங்கள் அவரிடம் தொகுதியின் பிரச்சினைகளை தெரிவிக்க விரும்புகிறோம். காந்திநகரில் அவரை யாராவது பார்த்தால் எங்களிடம் தெரிவியுங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் குறிப்பிடப்படது. ஆயினும் ‘அந்த போஸ்டருக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. எனவே இது காங்கிரஸ் கட்சியின் வேலையாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.