கோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

buttermilk

கோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அத்தகையவர்கள் மோர் கொண்டு போக நினைப்பார்கள். மேலும் மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து வாங்கிக் குடிப்பார்கள். எப்போதுமே எந்த ஒரு பொருளை சாப்பிடும் முன்னும், அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய…

நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.

கொழுப்பைக் கரைக்கும்

மதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும்

மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உடல் வறட்சியைத் தடுக்கும்

மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

Leave a Reply