நாம் தினமும் பலவகையான செயல்களைச் செய்கிறோம், ஆனால் செய்கின்ற அனைத்தையும் நம்மால் நினைவில்கொள்ள முடியாது. உதாரணமாக நம்முட ன் பழகியவர்கள், நாம் படித்த கட்டுரைகள் என நமது நினைவுகளை ஆராய்ந்து பார்த்தால் குறைந்தளவு மட்டுமே நம்மால் நினைவுகூற முடியும். இது அனைவ ருக்கும் இருக்கின்ற இயற்கையான உணர்வுதான், அதுபோல ஞாபக சக்தியினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.
நமது ஆசையினை செயல்படுத்த நாம் அடுத்த நாடுவது அறிவியலைத்தான். ஆனால், அறிவியலில் இதற்கென தனி மந்திரங்கள் எல்லாம் கிடையாது. முறை யான பயிற்சிகள் மற்றும் செயல்களால் இதனை வளர்த்துக் கொள்ள முடியும். நினைவுத்திறனை வளர்த்துக் கொள்ள அறிவியல்பூர்வமாக வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. உறக்கம் – நினைவுத்திறனுக்கு கொடுக்கும் புதிய ஆற்றல்களின் தொகுப்பு
சரியான தூக்கம் இருந்தால் நினைவுத்திறன் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என பல ஆராய்ச்சி முடிவுகள் சான்றுகளுடன் நிரூபித்துள்ளன. ஒவ்வொரு முறை நாம் தூக்கம் முடிந்து எழும்போதும் நமது நினைவுகள் மூளையுடன் இணைக்கப்படும். இதுகுறித்த ஆராய்ச்சி ஒன்றில் ஒரு சிலரை கணக்கில் எடுத்துக் கொண் டு அவர்களுக்கு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கூறினர். பின்னர் அவர்களை தூங்க அனுமதித்தனர். அவர்களின் தூக்கத்திற்கேற்ப நினைவுத்திறன் அடுத்தநாளில் மாறியிருப்பதை கண் டறிந்தனர்.
சரியான தூக்கம் கிடைத்து எழுபவர்கள் முந்தைய நாளி ல் நடந்த தேவையில்லாத விஷயங்கள் அனைத்தையும் மறந்து, குறிப்பிட்ட செய்திகளை மட்டும் நினைவில் வைத்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தூக்கம் வித்தியாசமான நினைவுத்திறனை மேம்படுத்தலாம் எனவும் இதில் தெரிய வந்துள்ளது. ஆனால் இதை ஏன் நாம் முழித்திருக்கும்போது செய்ய முடிவதில்லை. நமது மூளை பெரும்பாலான செயல்களை தடையில்லாமல் செய்ய நினைக்கிறது, அப்போதுதான் அது வேகமாகவும் செயல்படும். அது நாம் தூக்கத்தில் இருக்கும் போதுதான் நடக்கும், அதனால் தான் தூங்கும்போது நமது நரம்புகளின் நியூரான்கள் புத்துணர்ச்சி பெற்று அடுத்த நாளுக்குத் தயாராகின்றன.
2.உடற்பயிற்சிக்கும் நினைவுத்திறனுக்கும் உள்ள தொடர்பு
நாம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்களைப் பற்றி பல கட்டுரைகளில் படித்திருப்போம். தற்போது அந்த பயன்க ளுடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். படிக்கும் கால கட்டத்தில் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், நமது மனதையும் மூளையையும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும் எனவும், படிக்கும் விஷயங்களை மனதில் நிறுத்த உதவும் எனவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
முக்கியமாக உடலின் காற்று சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் நமது நினைவுத்திறனை வலுப்படுத்துவதில், முக்கியப்பங்கு வகிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வுகளை எலிகளுக்கு செய்து உறுதியும் செய்துள்ளனர்.
3.காஃபி குடிப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும்
நீங்கள் தினமும் காஃபி குடிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்திதான். ஜனவரி 2014 இல் நடத்தப்பட்ட ஆய்வில் காஃபிக்கும் நினைவுத்திறனுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இரண்டு கப் காஃபி கொடுப்பதால் நாம் படித்த விஷயங்களை அடுத்த நாள் நினைவுக்கு கொண்டுவருவது எளிதாக உள்ளது என பலர் கூறியுள்ளனர். ஆனால், இது பற்றிய தெளிவான ஆய்வு முடிவுகள் இன்னும் சரிவர வெளியிடப்படவி ல்லை.
4. நினைவக அரண்மனை’ – நினைவினை மேம்படுத்த உதவும்
தொடர்ச்சியாக எதையாவது நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இந்த ‘நினைவக அரண்மனை’ கண்டிப்பாக உதவும். உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் சென்று தேவையான பொருட்களை சரியான பிரிவினைப் பார்த்து அடுக்கி வைக்கும் முறையி னை நினைவில் வைத்துக் கொ ள்ளுங்கள். இதைப் போல் தான் இந்த நினைவக அரண்மனையு ம், நாம் நம் வீட்டில் பொருட்களை அடுக்கி வைப்பதுபோல இங்கு நினைவுகளை சரியான பாதையில் கொண்டு சென்று நினைவில் வைக்க வேண் டும்.
வீட்டில் அடுக்கி வைத்த அதே பொருளை திரும்ப எடுக்கும்போது நாம் அடுக்கி வைக்கும்போது எந்த பாதை யில் சென் றோமோ, அதே பாதையினை மீண்டும் மேற்கொள்வோம். அதேபோல்தான் நினைவினை திரும்ப எடுக்கும்போதும், நாம் அதை நினைவில் வைக்க என்ன செய்தோமோ அ தே முறையினை பின்பற்ற வேண் டும்.
5.மின்காந்த தூண்டலால் நினைவு த்திறனை அதிகரிக்கலாம்
மின்காந்தத் தூண்டலின் உதவியால் நமது நினைவுத் திறனை அதிகரிக்க முடியு ம் என ஆகஸ்ட் 2014 இல் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மருத்து வ முறைகளால் செய்யப் படுகிறது. இவ்வாறு அடிக் கடி மின்காந்தத்தூண்டல் செய்துகொண்டவர்கள் பெரும்பாலான விஷயங்களை நினைவுகூற முடிந்ததாக கூறினார்கள். ஆனால் இத னால் பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுமா? என்பது குறித்த ஆய்வுகளை நரம் பியல் வல்லுநர்கள் மேற் கொண்டுள்ளனர். அதனால் இவற்றை தற்போது முயற் சிக்க வேண்டாம்.
6.நினைவுத்திறனை அதிகரிக்கும் மாத்திரைகள்–எதிர் கால ம்
இதற்கென தனி மாத்திரைகளை இதுவரை எவரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மூளைக்கும் நினைவுகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ச்சிகள் எலிகளின்மீது நடைபெற்று வருகின்றன. இவை பற்றிய தெளிவான ஆய்வுமுடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை மனிதனின் மீது செயல்படுத்துவார்கள் .ஆனால், இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. நமது நினைவுத்திறன் ஒரு சர்ச்சைக்குரிய புதிரான அமைப்பு, பலதரப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்புதான் மனி தனின் மீது இந்த மாத்திரைகள் போன்ற மருத்துவ ஆயுதங்களைச் செயல்படுத்துவார்கள்.
7. மூளைக்கான சிப் – அதிநவீன எதிர்காலம்
இதற்கான காலகட்டம் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு சுமார் 40மில்லியன் டாலர்களை , மூளைசம்பந்தப்பட்ட நினைவுத்திறன் ஆய்வுகளுக்கு செலவிட முடிவெடுத்துள்ளது. புதிய நினைவுகளை எப்படி எளி தாக நினைவில் ஏற்றுவது என்பது குறித்த பல புதிய விளக்கங்களைக் கொடுக்க இந்த ஆய்வு உதவும்.
பென்டகனில் இருந்து கிடைத்த செய்தியின்படி நினைவுத்திறன் சம்பந்தப்பட்ட இந்த ஆராய்ச்சிகளின் உதவி கொண்டு இராணுவம் மற்றும் இராணுவ வீரர்களின் பல த்தினை பல மடங்கு அதிகரிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
இதனை சாத்தியப்படுத்த விஞ்ஞானி கள் முதலில் நினைவுகள் எந்த முறைப்படி சேமிக்கப்படுகின்றன என்ப து குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொ ள்வர். அதன் பின்பு அதே முறையில் நினைவுகளை மீளக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்து விடலாம் என்கின்றனர் அவர்கள். பொறியியல் வல்லுநர்கள் விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டு இது சம்பந்தப்பட்ட கருவிகளை உருவாக்க முடியுமா என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஊகிப்பின்படி இன்னும் நான்கு ஆண்டுகளில் நினைவுத்திறனால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய தேவையான விஷயங்களை கண்ட றிந்துவிடுவார்கள்.
எப்படியெல்லாம் நாம்நம் நினைவுகளை மேம்படுத்த நினைத்தாலும், முறையான பயிற்சிகள் இருந்தால் எந்த வித மருத்துவ ஆயுதங்களின் துணை இல்லாமலே நாம் நமது நினைவுகளை நினைவில் வைக்க முடியும். என்ன இப்போது படித்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டீர்களா?