நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில், நொறுக்கு தீணிகள் அதிகம் சாப்பிடுவதால், மனிதர்களின் மூளை செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெறும் 6 நாட்களில் அதிகம் நொறுக்கு தீணிகள் சாப்பிட்ட எலிகளின் மூளை செயல்பாடுகளில் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலிகளுக்கு நொறுக்கு தீணிகளும் அதே எண்ணிக்கையிலான எலிகளுக்கு சத்தான உணவும் கொடுக்கப்படு வந்துள்ளது.
6 நாட்களில் நொறுக்கு தீணி சாப்பிடும் எலிகளின் மூளை செயல்பாடுகள் தாமதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து ஆராய்ச்சி குழுவினர் கூறுகையில், “ எலிகளின் மூளை செயல்பாடுகளில் வெறும் 6 நாட்களில் தெரிந்த மாறுதல் மனிதர்களின் மூளையிலும் வேகமாக தெரியும் என்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே என்றாலும், மனிதர்களிம் மூளையும் பாதிக்கப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.
அடுத்த கட்டமாக, மனிதர்களின் மூளை செயல்பாடுகளில், நொறுக்கு தீணிகள் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்ற ஆராய்ச்சி நடக்கவுள்ளது.