தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கிய ஆளுனர்.
உலகிலேயே அதிகளவு தீவிரவாத தாக்குதல் நடைபெறும் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசார்-இ-ஷரீப் என்ற நகரில் இந்திய துணைத் தூதரகத்தின் மீது நேற்று தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். அப்போது, இந்திய துணைத் தூதரகத்தைப் பாதுகாக்க பல்க் மாகாண ஆளுநர் அடா முகமது நூர் அதிரடியாக துப்பாக்கியை ஏந்தி தீவிரவாதிகளுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகைப் படங்களை பல்க் மாகாண ஆளுநர் அடா முகமது நூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் புகைப் படங்கள் ஒன்றில் நூர் கையில் துப்பாக்கியில் குறிபார்ப்பது போல உள்ளது. மற்றொன்றில் பாதுகாப்புப் படையினருடன் உரையாடுவது போல உள்ளது. ஏற்கனவே அவர் இளைஞராக இருந்தபோது போர் பயிற்சி பெற்றவர் என்பதும் அவர் தலிபான் தலைமையிலான அரசுக்கு எதிரான போரில் தளபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆப்கனுக்கான இந்திய தூதர் அமர் சின்ஹா டுவிட்டரில், “தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ஆளுநர் கண்காணித்து வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.
Chennai Today News: Afghan provincial governor wields gun to save Indian mission