[carousel ids=”66988,66989,66990,66991,66992″]
ஆப்கன் நாடாளுமன்றம் புதிய பாதுகாப்பு அமைச்சரை தேர்வு செய்ய நேற்று கூடியது. இந்த கூட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தை தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் கார் குண்டு ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து பாதுகாப்பு வீரர்களை திசை திருப்பிய நிலையில் நாடாளுமன்றத்திற்குள் 7 தீவிரவாதிகள் நவீன துப்பாக்கிகளுடன் நுழைய முயன்றனர்.
ஆனால் பாதுகாப்பு படையினர் சுமார் ஒருமணி நேரம் எதிர் தாக்குதல் நடத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற 7 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 18 பேர் காயமடைந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் காயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.