11 வருடங்களுக்கு பின் ரீமேக் ஆகும் அஜித்தின் ‘வரலாறு’
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘வரலாறு’ திரைப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் அட்டகாசமாக நடித்திருப்பார். இதில் ஒரு வேடம் பரதநாட்டிய கலைஞர் வேடம் ஆகும். அஜித், அசின் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் 11ஆண்டுகள் கழித்து இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், அசின் வேடத்தில் முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அனேகமாக இந்த படத்தை தமிழில் இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் அவர்களே இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.