20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் அஜித்-அமிதாப்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித், விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ என்ற திரைப்படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தயாரித்தார். ABCL என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக இந்த படத்தை தயாரித்த அவர் மிகப்பெரிய நஷ்டத்தை இந்த படத்தின் மூலம் பெற்றார். மேலும் ஒருசில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளால் அவர் கடனாளி ஆகி பின்னர் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி மூலம் கடனில் இருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே ABCL தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே விஜய்யை அடுத்து அஜித்தை அட்லி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் தற்போது தனது 57வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னர் அவர் அட்லி-அமிதாப்புடன் இணைவார் என்று கூறப்படுகிறது.