விவாகரத்து ஆகி 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம் செய்த ஜோடி
அமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு தம்பதி மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் 83 வயது ஹரால்ட் ஹோலண்ட் என்பவருக்கும், 78 வயது லில்லியன் பார்ன்ஸ் என்பவருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 1967-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்
இருவருமே தனித்தனியாக மறுதிருமணம் செய்து தங்கள் துணையை இழந்ததால் கடைசி காலத்தில் தனியாக வாழும் நிலை ஏற்படது. இந்த நிலையில் சமீபத்தில் சந்தித்த இவர்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு இவர்களுடைய ஐந்து குழந்ததகளும், பேரக்குழந்தைகளும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து விரைவில் இவர்கள் மீண்டும் தம்பதியாக இணையவுள்ளனர்.