60 ஆண்டுகளுக்கு பின் தைப்பூச திருவிழா அன்று வரும் சந்திர கிரஹனம்
வரும் 31ஆம் தேதி பழனியில் தைப்பூச திருவிழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இன்று கொடியேற்றத்துடன் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் அதே நாளில் சந்திரகிரஹனமும் வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசமும் சந்திர கிரஹனமும் சேர்ந்து ஒரே நாளில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரகிரஹனம் வருவதை அடுத்து தைப்பூச திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பக்தர்களின் வசதிக்காக, குடிநீர், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை, கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்துள்ளன. 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.