70 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை பெற்ற முதல் அமெரிக்க பெண்

70 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை பெற்ற முதல் அமெரிக்க பெண்
kelly
உலகின் பல நாடுகளில் மரண தண்டனை நிறுத்தப்பட்டுவிட்டது. மரண தண்டனை வழங்கப்பட்டு வரும் நாடுகளிலும் பொதுவாக பெண்களுக்கு மரண தண்டனை வழங்குவதை தவிர்த்தே வருகின்றன. இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டக்ளஸ் என்பவரை அவரது மனைவி கெல்லி என்பவர் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் கெல்லிக்கு மரண தண்டனையும், அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கெல்லிக்கு விதிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

குற்றவாளி பெண்ணாக இருப்பதால் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், கெல்லியின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டதால் கெல்லிக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கடைசியாக 1945ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் இப்போதுதான் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply