கமல்-குமாரசாமி சந்திப்பு குறித்து ரஜினி கூறியது என்ன?
கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை நேற்று பெங்களூரில் கமல் சந்தித்தது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்த சந்திப்பு தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று பி.ஆர்.பாண்டியன் உள்பட ஒருசிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கமல் கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்தது ரஜினிகாந்த் கூறியபோது, காவிரி விவாகரத்தில் பேசி தீவு காண்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும் “சினிமாவில் 43 வருடங்களாக இருந்து வருகிறேன். ஸ்டண்ட் செய்து படத்தை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் காலா படம் கர்நாடகாவில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளது என்றும் கர்நாடக முதல்வர் நியாயம் என்ன என்பதை அறிந்து செயல்படுவார் என நம்புகிறேன் என்றும் கூறினார்.
மேலும் காலா படத்திற்கு இதைவிட நிறைய சிக்கல்கள் வரும் என எதிர்பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி கூறிய சமூக விரோதி கருத்தை திரித்து கமல் கூறிய நிலையிலும், கமலுக்கு ஆதரவான கருத்தையே ரஜினி கூறியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.