27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே பேருந்து சேவை ஆரம்பம்.

27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே பேருந்து சேவை ஆரம்பம்.
nepal1
இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளுக்கு இடையேயான இயங்கி வந்த பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மீண்டும் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் நேற்று முதல் பேருந்துகள் இயங்கியதால் நேபாளம் மற்றும் உத்தரகாண்ட் மாநில மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டதை அடுத்து  இரு நாடுகளின் எல்லையில் வசிக்கும் மக்கள் முதல் பேருந்துக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். குடும்ப ரீதியாகவும், வணிக ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவு இன்னும் வலுப்பெற்றுள்ளதாக எல்லையோர மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பேருந்து வசதியால், நேபாளத்தின் காஞ்சன்பூர், தண்டில் துரா, வோட்டி, சாபேன், அஷம், கலாலி, ஜாக்புத்தா மற்றும் சித்தார்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த  சம்பாவாட் மாவட்டத்தில் உள்ள மக்களும் பெரும் பயன் அடைவர்

குளிரூட்டப்பட்ட வசதியுடைய அந்த பேருந்துகள் காஞ்சன்பூருக்கு தினமும் அதிகாலை 6 மணிக்கு செல்லும். அங்கிருந்து மாலை 6 மணிக்கு டெல்லிக்கு புறப்படும்.

இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு எவ்வித சிறப்பு ஆவணங்களும் வழங்கத் தேவை இல்லை. பயணிகளுக்கு வை-ஃபை இணைப்பு மற்றும் ஒருபாட்டில் மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

nepal nepal2

Chennai Today News: After A Gap of 27 Years, Bus Service Resumes Between India And Nepal

Leave a Reply