மதுவிற்பனை செய்யும் கடைகளை அடித்து நொறுக்குங்கள். பீகார் முதல்வர் அறிவுறுத்தல்

மதுவிற்பனை செய்யும் கடைகளை அடித்து நொறுக்குங்கள். பீகார் முதல்வர் அறிவுறுத்தல்

nitesh kumarதமிழகம் உள்பட பல மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் பீகாரில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதன் முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டு மதுபான தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பீகாரின் எந்த பகுதியிலும் நாட்டு மதுபான தொழிற்சாலை இயங்காது என்றும் அவ்வாறு நாட்டு மதுபான தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக இயங்கினால் அவற்றை அடித்து நொறுக்குங்கள் என்று பிகார் பெண்களுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பிகாரில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டு மதுபான விற்பனைக்கான தடை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுவகைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில அரசு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் என்றும் அந்த வகை மதுக்களும் 6 மாதங்களுக்கு பிறகு முழுமையாக தடை செய்யப்படும்” என்றும் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் நேற்று சட்டமன்றத்தில் டாஸ்மாக் கடைகளை இப்போதைக்கு மூட வாய்ப்பு இல்லை என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply