‘பழம் நழுவி பாலில் விழாமல் தரையில் விழுந்தது ஏன்?

‘பழம் நழுவி பாலில் விழாமல் தரையில் விழுந்தது ஏன்?
201504270049075728_Vijayakanth-meeting-with-Karunanidhi_SECVPF
திமுக தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் தேமுதிகவுடனான கூட்டணி குறித்து அளித்த பேட்டியில் பழம் கனிந்து விட்டது. பாலில் விழவேண்டியதுதான் பாக்கி’ என்று கூறினார்.
ஆனால் தற்போது பழம் நழுவி பாலில் விழாமல் தரையில் விழுந்துவிட்டது.

விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற அறிவிப்பால் பெரும் பாதிப்பு அடைந்தது திமுக கூட்டணிதான் என்றே கருதப்படுகிறது. வெள்ளம் பாதித்த ஒருசில மாவட்டங்கள் தவிர மீதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவின் நிலை வலுவாகத்தான் உள்ளது.

அதிமுகவை எதிர்த்து வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாகவாது ஆக முடியும் என்பதால்தான் தேமுதிகவை கூட்டணியில் என்ன விலை கொடுத்தாலும் இணைக்க வேண்டும் என்று திமுக தலைமை விரும்பியது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கசப்பான அனுபவங்களை பெற்ற தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அதே கசப்பான நிலைதான் தொடரும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. தேமுதிக எந்த கூட்டணிக்கு சென்றாலும் அந்த கூட்டணிக்குத்தான் பலம் சேருமே தவிர தேமுதிகவுக்கு எந்த லாபமும் இருக்காது. எனவே இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் தனது கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தனித்து நின்று பிடிக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் நோக்கம் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Leave a Reply