கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே தினத்தில் பீகார் மாநிலமும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பீகார் மாநில அரசும், மத்திய அரசும் இனைந்து மீட்புப் பணிகளை கவனித்து வரும் நிலையில் இந்த மீட்புப்பணி இன்று பெய்த கன மழை காரணமாக தடைபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாட்னா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜார்கண்ட்டுக்கு அருகே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், பிகாரில் மழை பெய்து வருவதாகவும், வரும் 30ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மாநில அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது