டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த ஆவணப்படம் ஒன்றை பிரபல தொலைக்காட்சியான பிபிசி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் குற்றவாளி முகேஷ் சிங்கிடம் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி எடுத்தது.
இந்த பேட்டியில் முகேஷ் சிங் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண்கள் அமைப்பு இந்த ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றன.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தை அடுத்து இந்த ஆவணப்படத்தை ஊடகங்கள் மூலம் இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்தப் பகுதியிலும் ஒளிபரப்பாகாமல் தடுக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்
மேலும் இது குறித்த வழக்கு ஒன்றில் புதுடில்லி நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை, ஆவணப் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் இந்தியாவின் தடையை மிறி இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிபிசி தொலைக்காட்சி நேற்று இரவு அந்த படத்தை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.