‘கபாலி’யை அடுத்து ‘விஜய் 60’ உரிமை பெற்ற பிரபல நடிகர்
நடிகரும் பிரபல விநியோகிஸ்தருமான அருண்பாண்டியன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சிங்கப்பூர் ரிலீஸ் உரிமையை பெற்று அதிக திரையரங்குகளில் சிங்கப்பூரில் ரிலீஸ் செய்தார். இந்த ஒரு வாரத்தில் மட்டும் அவருக்கு மிகப்பெரிய தொகை இந்த படத்தால் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘கபாலி’ வெற்றி தந்த உற்சாகத்தில் தற்போது ‘விஜய் 60’ படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.16.5 கோடி கொடுத்து பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ‘தெறி’ படம் ரூ.18 கோடிக்கு வெளிநாட்டு உரிமை விற்பனையாகியுள்ள நிலையில் ரூ.1.50 கோடி இந்த படத்திற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் வெளிநாட்டு உரிமை வியாபாரத்தில் ‘விஜய் 60’ ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ‘கபாலி’, ‘லிங்கா’, எந்திரன்’, ‘தெறி’ ஆகிய படங்கள் அதிக விலைக்கு வெளிநாட்டு உரிமைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.