After Karunanidhi, PMK leader Ramdoss meet Vaikoபாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன் தினம் திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்ததை அடுத்து இன்று மதிமுக தலைவர் வைகோவை சந்தித்து பேசியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியின் மகள் சம்யுக்தா, ராமதாசின் மகள் சாந்தியின் மகன் பிரித்தீவன் ஆகியோர் திருமணம் அடுத்த மாதம் 30 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
தனது பேத்தி, பேரன் ஆகியோருக்கான திருமண அழைப்பிதழை, ராமதாஸ் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணாநகர் இல்லத்தில் ராமதாஸ் சந்தித்தார். அப்போது தனது பேத்தி, பேரன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசும்போது, ”வைகோவை சந்தித்து அரசியல் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதற்கான நேரம் இதுவல்ல. என் பேரன்–பேத்தி திருமணத்துக்கு வருமாறு அவரை நேரில் அழைத்தேன்” என்றார். மேலும் ராமதாஸ் இன்று தமிழக கவர்னர் ரோசய்யா அவர்களையும் சந்தித்து தனது பேரன், பேத்திகளின் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.