ஓபிஎஸ், சசிகலாவை சந்தித்த பின் ஆளுனர் செய்தது என்ன?

ஓபிஎஸ், சசிகலாவை சந்தித்த பின் ஆளுனர் செய்தது என்ன?

தமிழக கவர்னர் நேற்று மாலை சென்னை வந்த நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை மாலை 5 மணிக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை இரவு 7.30 மணிக்கும் சந்தித்தார். இருவரிடமும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், அதன் பின்னர் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு பின்னர் அவர் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்த முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தமிழக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்று கூறியுள்ள உள்துறை அமைச்சக வட்டாரம் அவரது அறிக்கை வந்த பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறது.

ஆளுனர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பிய விவகாரம் குறித்து ஒருசிலர் விமர்சித்து வருகையில் இதுகுறித்து சட்ட வல்லுனர்கள் கூறியபோது, ‘பொதுவாக பிரதமருக்கு ஆளுநர் எந்த அறிக்கையும் அனுப்ப முடியாது என்றும் உள்துறை அமைச்சகத்துக்கு மட்டுமே அறிக்கை அனுப்புவது வழக்கம் என்றும், ஆளுனர் வித்யாசாகர் ராவ் செய்தது சட்டப்படி சரியே என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply