முஸ்லீம்களின் எதிர்ப்பு எதிரொலி: சர்வதேச யோகா தினத்தில் சூர்ய நமஸ்காரம் நீக்கம்.

surya namaskarசர்வதேச யோகா தினம் வரும் 21ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பான முறையில் அனுசரிக்க பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்த நாளில் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா, ஆசனம், சூரிய நமஸ்காரம் ஆகியவை நடத்த ஏற்பாடுகள் செய்து வரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முஸ்லிம் அமைப்பு ஒன்று சூரிய நமஸ்காரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. யோகா மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை முஸ்லிம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்றும், யோகாவும், சூரிய வணக்கமும் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து நாடு தழுவிய தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாகவும் முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் முஸ்லீம் அமைப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் யோகா தின நிகழ்ச்சிகளிலிருந்து சூரிய நமஸ்காரம் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply