சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்
இந்த நிலையில் பெட்ரோலை மிச்சப்படுத்த காசை மத்திய அரசு சிலிண்டர் மூலம் பறித்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று முதல் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இதுவரை 850.50 என்ற நிலையில் இருந்த சிலிண்டர் இன்று முதல் 875.50 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோலில் மிச்சம் செய்த காசு சிலிண்டரில் போயே போச்சு என பொதுமக்கள் வருத்தத்துடன் கூறிவருகின்றனர்