தமிழக எல்லையில் ஒரு மாதம் ஓய்வு எடுக்கின்றார் மணிப்பூர் இரோம் ஷர்மிளா

தமிழக எல்லையில் ஒரு மாதம் ஓய்வு எடுக்கின்றார் மணிப்பூர் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மனித சமூக உரிமை போராளி இரோம் ஷர்மிளா தமிழக எல்லையில் உள்ள கேரளாவின் அட்டப்பாடி என்ற பகுதிக்கு ஓய்வு எடுக்க வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பழங்குடியின மக்கள் அதிகளவு வசிக்கும் தமிழக, கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடி என்ற பகுதிக்கு வந்துள்ள இரோம் ஷர்மிளா இங்கு ஒரு மாதம் வரை தங்கி, ஓய்வு எடுக்கதிட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஓய்வுக்கு நடுவே அவர் தமிழகம் வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் படையினருக்கான சிறப்பு உரிமைகள் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சிறையில் இருந்த இரோம் ஷர்மிளா அம்மாநில மக்கள் இந்த தேர்தலில் கசப்பான அனுபவத்தையே கொடுத்தனர்.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிய இரோம் கேரளாவில் ஒருமாதம் தங்கி ஓய்வு எடுக்க முகாமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply