ரூ.200 நோட்டை அடுத்து ரூ.20 நோட்டும் வெளியீடு
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பின்னர் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது. இந்த நிலையில் புதிய ரூ.200 நோட்டு மிக விரைவில் வெளியாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது
இந்த நிலையில் புதிய ரூ.20 நோட்டும் விரைவில் வெளியிடவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய 20 ரூபாய் நோட்டில் ஏற்கனவே இருப்பதை போன்று மகாத்மா காந்தியின் உருவப்படம், எஸ் (S) குறியீடு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டாலும், பழைய 20 ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது