7ஆண்டுகளுக்கு பின்னர் பங்குச்சந்தையில் ஏற்பட்ட திடீர் எழுச்சி.

7ஆண்டுகளுக்கு பின்னர் பங்குச்சந்தையில் ஏற்பட்ட திடீர் எழுச்சி.
share market rate increases
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கரடியின் பிடியில் இருந்த நிலையில் நேற்று திடீரென 777 புள்ளிகள் உயர்ந்து காளையின் பிடிக்கு சென்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ஒரே நாளில் 700 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் தினம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2016-17ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒருசில அறிவிப்புகளை வெளியிட்டபோதுகூட பங்குச்சந்தை ஏறவில்லை. பட்ஜெட் தினத்தில் சென்சென்க்ஸ் 152 புள்ளிகள் இறங்கியது. ஆனால் நேற்று காலை பங்குச்சந்தை ஆரம்பித்தது முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 777.35 புள்ளிகள் உயர்ந்து 23,779 புள்ளிகள் என்ற நிலையிலும், நிப்டி 235 புள்ளிகள் உயர்வுடன் 7,222 என்ற நிலையிலும் இருந்தது.

வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம்ராஜன் குறைக்க வாய்ப்பு உள்ளதாக வந்த செய்தியின் அடிப்படையில்தான் பங்குச்சந்தை எழுச்சி பெற்றதாகவும், இனி தொடர்ந்து ஒருசில நாட்களுக்கு பங்குச்சந்தை நிலை உயர்ந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply