‘வேதாளம்’ ரிலீஸுக்கு பின்னர் அஜீத்தின் மெகா திட்டம்.

‘வேதாளம்’ ரிலீஸுக்கு பின்னர் அஜீத்தின் மெகா திட்டம்.
ajith
அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்து முடித்துள்ள வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, கடந்த சில நாட்களாக டப்பிங் மற்றும் பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வந்தது. அஜீத்தின் ராசியான ஏவிஎம் டப்பிங் தியேட்டரில் கடந்த மூன்று நாட்களாக டப்பிங் செய்து வந்த அஜீத், நேற்றுடன் தனது டப்பிங் பணியை முடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன், தம்பி ராமையா, கபீர்சிங், ராகுல்தேவ், லட்சுமிமேனன் உள்பட அனைவரின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டது. தற்போது அஜீத்தின் டப்பிங் பணியும் முடிந்துவிட்டதால் அடுத்த வாரம் இந்த படம் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும், அதன் பின்னர் முழுவேகத்தில் புரமோஷன் பணிகளை தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

”வேதாளம்’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்ட அஜீத் தற்போது அடுத்தகட்டமாக காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பின்னர், அடுத்த பட ஆலோசனையில் ஈடுபட போவதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் அடுத்த படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரிக்கவுள்ளது என்பது மட்டுமே கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இயக்குனர் யார்? என்பது இதுவரை தெரியவில்லை. கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர் அஜீத்தின் அடுத்த படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply