பெங்களூர் சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு மேலும் ஒரு சிக்கல்

பெங்களூர் சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு மேலும் ஒரு சிக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சுதாகரனை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அடுத்த மாதம் 7ஆம் தேதி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கையும் அவரை நெருக்குவதால் அவருக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது அக்கட்சியின் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியதில் பல்வேறு வெளிநாட்டு வங்கி கணக்குகளில் முறைகேடாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுதாகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்த வழக்கு ஒன்றில் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்வகித்து வந்த சசிகலா, டிடிவி தினகரன், சுதாகரன் ஆகியோர் மீது சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதாகரன் தொடர்ந்து ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசரணைக்கு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கெனவே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுதாகரன் இன்றும் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, சுதாகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும், அடுத்த மாதம் 7ம் தேதி சுதாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி அமலாக்கதுறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply