கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் குறிப்பாக கேரள மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
கேரளாவில் கடந்த 3 நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக நேற்று சுமார் 32,000 பேர் போரினால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது