புதினை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளார் திடீர் நீக்கம்

புதினை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளார் திடீர் நீக்கம்

ரஷிய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான புதினை எதிர்த்து போட்டியிட்ட ஒரு வேட்பாளர் திடீரென நீக்கப்பட்டதால் புதின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது

புதின் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து 41 வயது அலெக்சி நவல்னி போட்டியிட முடிவு செய்தார். ஆனால் அவர் போட்டியிடுவதற்கு ரஷியாவின் தேர்தல் கமிஷன் திடீரென தடை விதித்து உள்ளது. ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது

இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகிவிட்டது. இது அரசியல் சூழ்ச்சி என்று அலெக்சி நவல்னி குற்றம்சாட்டி உள்ளார். முக்கிய எதிரி களத்தில் இல்லாத நிலையில் புதின் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளராக உள்ளார்.

புதினை எதிர்த்து தற்போது காம்யூனிஸ்டு கட்சியின் பிரபல கோடீசுவரர் பாவெல் குருடினின், பிரபல டி.வி. நடிகர் கெனியா சோப்சாக், விளாடிமிர் ஷிரிநோவ்ஸ்கி (பழமைவாத கட்சி), கிரிகோரி யவலின்ஸ்கி (லிபரல் கட்சி), கோடீசுவரர் போரிஸ் டிடோவ், செர்ஜி பபுரின் (தேசியவாத கட்சி), மாக்சிம் சுரைகின் (அதிருப்தி கம்யூனிஸ்டு) ஆகிய 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் புதினுக்கு ஆதரவு அதிகமாக உள்ளதால் அவர் வெற்றி பெறுவது உறுதி என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Leave a Reply