மே 4 முதல் அக்னி நட்சத்திரம்: சுட்டெரிக்க காத்திருக்கும் சூரியன்
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது மே 4 முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. மே 4 முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை அறிவிப்பு தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. மிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சலனத்தின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த போதிலும் நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடங்கியவுடன் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தும் என்றும், இதனால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வானிலை அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக் கடுமையான வறட்சி நிலவி வருவதற்கு கோடை வெப்பமும், மழையின்மையும் காரணமாகும். வறட்சி மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் அல்லாடி வருகின்றனர். தமிழகத்தில் மார்ச் மாதமே பல இடங்களில் 100 டிகிரி வெயில் அடித்து கோடையை தொடக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.