தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர்கள் வழக்கு

tajmahalஉலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கி வரும் தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கவேண்டும் என்று ஆக்ரா நீதிமன்றத்தில்ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர் 6 வழக்கறிஞர்களுடன் இணைந்து நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில், “தாஜ்மஹால் இருக்கும் இடம் முன்காலத்தில் கல்லறையாக இருந்ததில்லை என்றும் அங்கு சிவன் கோவில் மட்டுமே இருந்தது என்றும் அந்த இடத்தை   ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கி பின்னர் தாஜ்மஹாலை கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்கள் வழிபாடு செய்த சிவன் கோவிலை ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் கல்லறையாக மாற்றி அதற்கு தாஜ்மஹால் என்று பெயரிட்டதாகவும், மீண்டும் இந்துக்கள் அங்கே சிவ வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும் என்றும் அந்த இடத்தில் ஒருபோதும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் தற்போது இந்திய தொல்பொருள்துறையின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply