அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணசாமியின் பதவி பறிப்புக்கு வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தொலைப்பேசி அழைப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அவர் கடைசியாக பேசிய நபர்களை விசாரணை செய்தால் அவரது தற்கொலைக்கு காரணம் தெரியவரும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறாது.
முத்துக்குமாரசாமியின் செல்போன்கள் கால்களை ஆய்வு செய்த போலீஸார் அவர் கடந்த ஜனவரி மாதம் 268 அழைப்புகளும், பிப்ரவரி மாதம் 691 அழைப்புகளும் பதிவாகியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த அழைப்புகளின் விவரங்களை கண்டுபிடிப்பதில் தற்போது போலீஸார் தீவிர விசாரணையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான அழைப்புகள் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணசாமியின் உதவியாளர்கள், கார் ஓட்டுனர் ஆகியோர்களிடம் இருந்து வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், மேலும் நெல்லை மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் முத்துக்குமாரசாமியிடம் செல்போனில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிபிசிஐடி போலீஸார்களின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து முத்துக்குமாரசாமியின் தற்கொலை மர்மம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.