ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திடீர் தடை. கோலிவுட்டில் பரபரப்பு

ஏஜிஎஸ்  நிறுவனத்திற்கு திடீர் தடை. கோலிவுட்டில் பரபரப்பு
thanioruvan
சமீபத்தில் ரிலீசான ஜெயம் சகோதரர்களின் ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி செய்தியாக இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘தனி ஒருவன்’ படத்தின் புரமோஷனுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக செலவு செய்து புரமோஷன் செய்ததற்காக இந்த தடை விதிக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒருசில குறிப்பிட்ட வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளில் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தது. அதாவது  பொதிகை, ஜெயா ப்ளஸ், தந்தி டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் மட்டுமே விளம்பரம் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருந்தது. ஆனால் ‘தனி ஒருவன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வேறு சில தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ததாகவும், இந்த படத்தின் புரமோஷன் செலவு நிர்ணயிக்கப்பட்டதை விட மிக அதிகம் என்றும் தயாரிப்பாளர் சங்கம் குற்றஞ்சாட்டி இந்த தடையை விதித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் கூறியபோது, “‘தனி ஒருவன்’ படத்தின் விளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க தடை விதித்திருக்கிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறது” என்று ததெரிவித்திருக்கிறார்.

Leave a Reply