கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அகமது பட்டேல் உயிரிழப்பு என தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருக்கு வயது 71
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அகம்து பட்டேல் கடந்த அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
ஹரியானா மாநிலத்தில் குறுகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகமது பட்டேல் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அகமது பட்டேல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது