அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை!

அ.தி.மு.க.வில் தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக இருந்து வரும் பரசுராமன் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிப் பெற்று தற்போது பதவியில் உள்ளார். இவர் தஞ்சை, ஒரத்தநாடு, வல்லம், செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர் ராஜகோபால் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை ரகுமான் நகரில் உள்ள பரசுராமன் வீட்டிற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்து பரசுராமன் உட்பட அவரது குடும்பத்தினர்களிடம் விசாரணை செய்து சோதனை நடத்தினர். இதையடுத்து வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை 5 சூட்கேசில் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

பரசுராமன் வீட்டில் சோதனை செய்வதற்கு முன்பு எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணைச் செயலாளர் பாஸ்கர் என்பவரின் வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை நடத்தும் தகவல் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்களுக்கு தெரிந்ததும், அவர்கள் பரசுராமன் வீட்டின் முன்பு குவிந்த வண்ணம் இருந்தனர்

Leave a Reply