கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற அதிமுக: போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்!

அதிமுக வேட்பாளர் ஒருவர் கடைசி நிமிடத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் செய்ததால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளராக வாணிஸ்ரீ என்பவர் போட்டியிட்டார்

இந்தநிலையில் இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்ற நிலையில் கடைசி நிமிடத்தில் வாணிஸ்ரீ தனது மனுவை வாபஸ் பெற்றார்

அந்த தொகுதியில் திமுக அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டதால் தற்போது திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது