முன்னாள் அதிமுக பெண் அமைச்சர் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1991 முதல் 96 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் அமைச்சராக இருந்தபோது ரூபாய் 15.45 லட்சம் ஊழல் செய்ததாக புகார் செய்யப்பட்டது
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது

ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது

மேலும் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.