அதிமுக பொதுச்செயலாளராக 7வது முறையாக போட்டியின்றி தேர்வு ஆகிறார் ஜெயலலிதா.

jayalalithaதொடர்ந்து ஏழாவது முறையாகஅ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட உள்ளார். அதிமுக வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19ஆம் தேதி அதிமுக தலைமைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டது.  இந்த தேர்தலின் ஆணையராக கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2467 வேட்பு மனுக்கள் அவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவே போட்டியிட வேண்டும் என அனைத்து மனுக்களும் விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுவரை மனுதாக்கல் கட்டணமாக மட்டும் அதிமுக தலைமைக்கழகத்திற்கு ரூ.6 கோடியே 15 லட்சம் கிடைத்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தேர்தலில் ஜெயலலிதா இதுவரை 6 முறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைந்ததால் இந்த முறையும் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply