இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக விளங்கும் என பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவனமான என்.டி.டி. இன்று எக்சிட் போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 32 தொகுதிகளும், திமுகவுக்கு 5 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு இரண்டு தொகுதிகளும் கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. தமிழகத்தை பொருத்தவரை மோடி பிரதமர் ஆகவேண்டும் என அனைத்து தரப்பினர்களும் விரும்புகின்றனர் என்றும் ஆனால் தமிழத்தில் பாரதிய ஜனதா அமைத்த கூட்டணியை தமிழக மக்கள் சிறிதும் விரும்பவில்லை என்பதாகவே கருத்துக்கணிப்பு கூறுவதாகவும் என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 279 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 103 தொகுதிகளும், மற்ற கட்சியினர்களுக்கு 161 தொகுதிகளும் கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பு தெளிவாக கூறுகிறது.
இந்த புதிய எக்சிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகியிருப்பதால் தமிழகத்தில் அதிமுகவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே வேளையில் திமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் உள்ளன. கூட்டணி நாடகம் ஆடிய தேமுதிக கட்சி தலைவர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆடிப்போயுள்ளனர்.