தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி தூத்துக்குடி மாநகராட்சி பதவியை அதிமுக பிடித்துள்ளது. அங்கு போட்டியிட்ட அதிமுகவின் அந்தோணி கிரேஸி, 84,885 வாக்குகள் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமியை விட அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேஸி பெற்ற வாக்குகள் = 1,16,593
பா.ஜ.க. வேட்பாளர் ஜெயலட்சுமி பெற்ற வாக்குகள் = 31,708
இதேபோல் கோவை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். 6வது சுற்றின் முடிவின்படி வேட்பாளர்கள் பெற்ற விபரங்கள் பின்வருமாறு:
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்குமார் = 1,36,297
பா.ஜ.க. வேட்பாளர் = நந்தகுமார் 43,701
சி.பி.எம். வேட்பாளர் பத்மநாபன் = 10,799
ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் முடிவுகள்
அ.தி.மு.க. வேட்பாளர் சந்தான லட்சுமி = 20,554 வாக்குகள்
பா.ஜ.க. வேட்பாளர் துரைகண்ணன் = 7,385 வாக்குகள்