நானோபயோசிம் நிறுவனத்தின் – ஜீன் ராடார்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நானோபயோசிம் என்ற நிறுவனமானது ஜீன் ராடார் என்னும் புதிய வகை கருவியை அறிமுகபடுத்தியுள்ளது.

மரபணு ராடார் (ஜீன் ராடார்) என்னும் இந்த கருவி, ஒரு மணி நேரத்தில் எய்ட்ஸ் நோயைக் கண்டறியக் கூடியதாகும். மிகவும் குறைந்த செலவில் எய்ட்ஸ் நோயை கண்டறியும் இக்கருவி ஒரு ஐ- பாட் அளவில் தான் உள்ளது.

ஒரு மனிதனின் ரத்தம், உமிழ்நீர் அல்லது உடல் திரவத்தில் ஏதாவது ஒரு துளி எடுத்து நானோசிப்பில் வைத்து இந்தக் கருவியின் மூலம் பரிசோதித்தால் ஒரு மணி நேரத்தில் எய்ட்ஸ் நோயைக் கண்டறிய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

பொதுவாக எய்ட்ஸ் குறித்து செய்யப்படும் பரிசோதனையின் முடிவுகள் வெளிவர ஆறு மாதங்களாகும். அமெரிக்காவில் 200 டாலர் செலவில் குறைந்தது இரண்டு வாரங்கள் கழித்தே இதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ள இயலும்.

ஆனால் இந்த மரபணு ராடார் உபயோகிப்பதன் மூலம் 50லிருந்து 100 மடங்கு குறைவான கட்டணத்தில் ஒரு மணி நேரத்திலேயே சோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ள இயலும் என்று நானோபயோசிம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான டாக்டர் அனிதா கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த கருவியால் எய்ட்ஸ் நோயை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் இணையதளம் மூலமும் இதன் பயன்பாட்டைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply