ஏஐபிஎம்டி-2016: ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டு
அனைத்திந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவ தேர்வுக்கு (AIPMT 2016) ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://aipmt.nic.in/aipmt/online/AdmitCardAuth.aspx என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவலை பதிவுசெய்து நுழைவுச்சீட்டை பெறலாம்.
(ஏஐபிஎம்டி) நுழைவுத்தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அந்தவகையில், 2016-17-ம் கல்வியாண்டுக்கான தேர்வு மே 1-ம் நடத்தப்படுகின்றது. (தெலங்கனா, ஆந்திரப் பிரதேசம், காஷ்மீர் தவிர்த்து) இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவம்/பல் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.