இந்துக்களிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டது எதனால்? பரபரப்பு தகவல்

இந்துக்களிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டது எதனால்? பரபரப்பு தகவல்

pooriஇந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகிய பூரி ஜெகந்நாதன் கோவிலில் அசைவ உணவு பரிமாறப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் மாத இதழ் ஒன்றில் அச்சிடப்பட்ட செய்தி கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தனது தவறுக்கு ஏர் இந்தியா தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.

ஏர் இந்தியா சார்பில் வெளியாகும் மாத இதழ் ஒன்றில், உலக பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலையத்தில் தினமும் சுமார் 1,00,000 பேருக்கு, 24 மணிநேரமும் 285 வகை சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாரப்படுவதாக, செய்தி வெளியானது. இந்த செய்தியால் இந்து ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்கள் ஏர் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை அடுத்து ஏர் இந்தியா தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.

யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செய்தி வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அந்த பிரதி எடுக்கப்பட்டு விட்டது என்றும் ஏர் இந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. ஏர் இந்தியா தனது டுவிட்டரில் #AI apologises for the error. Our intention was not to hurt sentiments. #ShubhYatra magazine copies have been removed with immediate effect என்று கூறியுள்ளது.

Leave a Reply