ஏர் இந்தியா: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவால் இந்தியர்கள் அதிர்ச்சி
ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வெளி நாட்டு இந்தியர்களுக்கு வாங்க அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு தற்போது 49 சதவீதமாக உள்ளதாகவும் இந்த வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடு விதிமுறைகளை மீறாத வகையில் இருக்கும் என்றும் அவர்கள் உறுதி கூறி உள்ளனர் 100% வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு இந்தியர்களின் கையில் விரைவில் ஏர் இந்தியா செல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது