மே 4 முதல் விமான போக்குவரத்து தொடக்கம்: ஏர் இந்தியா அறிவிப்பு

மே 4 முதல் விமான போக்குவரத்து தொடக்கம்: ஏர் இந்தியா அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில், விமான போக்குவரத்து சேவையும் வரும் மே 3 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேபோல், ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஊரங்கால் தங்கள் சொந்த ஊருக்கும் சொந்த நாட்டிற்கும் செல்ல முடியாமல் தவித்து வருபவர்களுக்கு மே 4 முதல் விமோசனம் பிறக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply