அப்பா திரும்பி வருவார். ஏர் ஏசியா கேப்டனின் 8 வயது மகன் நம்பிக்கை.

flightகடந்த ஞாயிறு அன்று சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பைலட் உள்பட 162பேர் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து அனைவரது உடல்களையும் கடலில் இருந்து மீட்கும் பணி முடுக்கிவிடபட்டுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான QZ8501 என்ற விமானத்தின் கேப்டனின் 8வயது மகன் தன்னுடைய தந்தை இறந்தது கூட தெரியாமல் அவர் பணிமுடிந்து விரைவில் வீடு திரும்புவார் என நினைத்துக்கொண்டிருக்கின்றார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

ஏர் ஏசியா விமானத்தின் கேப்டன் இரியாண்டோ என்பவரது 8 வயது மகனிடம் அவனுடைய உறவினர்கள் பேச்சுகொடுத்தபோது தனது தந்தை டியூட்டிக்கு சென்றுள்ளதாகவும், டியூட்டி முடித்துவிட்டு விரைவில் திரும்பி வருவார் என்றும் கூறியதை கேட்டு கண்ணீர் விட்டு கலங்கி அழுததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply