இந்தோனேஷியா விமானம்: 30 உடல்கள் மட்டுமே மீட்பு. மோசமான வானிலையால் மீட்புப்பணி தாமதம்.

flight 1

கடந்த ஞாயிறு அன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடல்களை மீட்பதில் மீட்புக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 162 பேர் பயணம் செய்த விமானத்தில் இருந்து இதுவரை 30 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதி உடல்கள் விமானத்திற்குள்ளேயே இருப்பதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழுவினர் கூறியுள்ளனர்

flight 2

விபத்துக்குள்ளான விமான கடல் மட்டத்தில் இருந்து 100 அடி உள்ளே இருப்பதால் விமானத்திற்குள் இருக்கும் உடல்களை மீட்பதிலும், கருப்புப்பெட்டியை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் மீட்புக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீட்புப்பணிகள் நடைபெறும் பகுதியில் மிக மோசமான வானிலை நிலவுவதாக கூறப்படுகிறது.

flight 3
இந்தோனேஷிய மீட்புக்குழுவினர்களுடன் சர்வதேச மீட்புக்குழுவினர்களும் நேற்று முதல் இணைந்திருப்பதால் மீட்பு நடவடிக்கையில் இனி தாமதம் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் கடலில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், ஆனால் புயல் மற்றும் கடலின் அழுத்தம் விமானத்தை கவிழ்த்து மூழ்கடித்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன

   flight 4 flight 5 flight 6 flight

Leave a Reply