ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து. 61 பேர் பலி. அதிர்ச்சி வீடியோ இணைப்பு
ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 61 பேர் வரை பலியானதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தற்போது மீட்புப்படைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தெற்கு பகுதியில் ரோஸ்டவ் என்ற நகரில் உள்ள விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது திடீரென விமான பைலட்டுகளின் கட்டுப்பாட்டினை இழந்து தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த அதிர்ச்சி விபத்தில் 61 விமான பயணிகள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் எதிரே இருந்த கட்டிடம் ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படை, தீயணைப்பு படை ஆகியவை விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப்பணிகள் முடிந்த பின்னர்தான் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.