எம்பியை தண்டிக்க விமான நிறுவனங்களுக்கு உரிமையில்லை. பி.ஜே. குரியன்
சமீபத்தில் ஒரு எம்பி, விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதோடு, விமான ஊழியரையும் தாக்கியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒருசில விமான நிறுவனங்கள், அந்த எம்பியை விமானத்தில் பறக்க தடைவிதித்துள்ளன.
இதுகுறித்து நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சமாஜ்வாடி எம்பி., நரேஷ் அகர்வால் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ‘விமானப் பயணத்தின்போது அத்துமீறி நடந்துகொண்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சில விமான நிறுவனங்கள், அந்த விமானத்தில் பயணிக்கத் தடை விதிப்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த ராஜ்ய சபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ”உறுப்பினரின் கருத்து எனக்கு உடன்பாடானதுதான். யாரையும் தண்டிக்கும் அதிகாரத்தை விமான நிறுவனங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. இந்தப் பிரச்னையை மத்திய அரசு கவனிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.