அஜீத் ஜோடி ஐஸ்வர்யாராய்? வேகம் எடுக்கின்றது ‘தல 57″

ajith and aiswarya raiசிறுத்தை சிவா அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் சில நாட்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ‘தல 57″ படத்தின் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.

‘தல 57’ படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாகவும் அஜீத்தின் பழைய நண்பர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யாராய் அஜீத் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அஜீத் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் தரப்பில் இருந்து ரூ.4 கோடி கேட்கப்படுவதாகவும், இதனால் தயாரிப்பாளர் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் முதல்முறையாக தற்போது அஜீத்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த ‘பில்லா, ஆரம்பம் இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸ் சூப்பர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கூட்டணியில் ஐஸ்வர்யாராயும் இணைந்தால் படத்தின் வெற்றி உறுதி என அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் கூறி வருகின்றனர்.

Leave a Reply